திருச்சி காவேரி மருத்துவமனையில் 11 மாத குழந்தையின் துண்டான விரலை மீண்டும் பொருத்திய மருத்துவர்கள்

By செய்திப்பிரிவு

திருச்சி காவேரி மருத்துவமனையில், வலது கை மோதிர விரல் துண்டான நிலையில் 11 மாத குழந்தை சிகிச்சைக் காக அண்மையில் அனுமதிக்கப்பட்டது. மருத்துவமனையின் நுண் அறுவை சிகிச்சை துறைத் தலைவர் எஸ்.ஸ்கந்தா, மருத்துவர்கள் ஆதில்அலி, விஷால்கலசி, கே.செந்தில்குமார் (மயக்கவியல் துறைத் தலைவர்) மற்றும் மருத்துவர்கள் பி.சசிகுமார், எஸ்.நிர்மல்குமார் ஆகியோர் இணைந்து, அந்தக் குழுந்தைக்கு தொடர்ந்து 5 மணிநேர அறுவை சிகிச்சை அளித்து, துண்டான விரலை வெற்றிகரமாக பொருத்தினர்.

நுண்ணோக்கியின் வாயிலாக 25 மடங்கு பெரிதாக்கப்பட்டு, ஆழமாக உள்ள அனைத்து ரத்த நாளங்கள், தசை நாண்கள் மற்றும் நரம்புகள் சீரமைக்கப்பட்டன. இந்த ரத்த நாளங்களின் விட்டம் அரை மில்லி மீட்டருக்கும் குறைவானது. இவற்றை தைக்க தலைமுடியைவிட 5 மடங்கு மெல்லிய மருத்துவ சூட்சமங்கள் பயன்படுத்தப்பட்டன.

அறுவை சிகிச்சை முடிந்து, ஒரு மாதத்துக்குப் பின் அந்த குழந்தை இழந்த விரலுடன் சேர்த்து, விரலுக்கு உண்டான இயக்கத்தையும் திரும்பப் பெற்று, இயல்பு நிலைக்கு மீண்டது. இது திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் முதல் வெற்றிகரமான அறுவை சிகிச்சை. இதற்காக காவேரி மருத்துவமனை உலகின் தலைசிறந்த நுண்ணோக்கி Zeiss Kinevo 9005 மற்றும் இதர உபகரணங்களைக் கொண்டுள்ளது. இதுபோன்று உறுப்புகள் துண்டானால், அந்த உறுப்பை ஐஸ்கட்டிகள் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் பையில் (துண்டான உறுப்பு நேரடியாக ஐஸ்கட்டி யில் பட்டு உறைந்து விடாதவாறு) சுற்றி, மருத்துவமனைக்கு விரைந்து கொண்டுவர வேண்டும்.

காவேரி மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகள் வெற்றிக ரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. உதடு, அன்னப்பிளவு மற்றும் குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சைகளுக்கு இங்குள்ள பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறை சிறப்பு பெற்றது. நீரிழிவு நோயாளிகளின் பாதங்களை சீரமைக்கும்(மைக்ரோ சர்ஜரி) சிகிச்சை மற்றும் பிறவி கை முரண்பாடு சிகிச்சை போன்றவை தலைசிறந்த நிபுணர்களால் அளிக்கப்படுகின்றன என திருச்சி காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.l

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்