காரைக்காலில் நேற்று, மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சரும், புதுச்சேரி மாநிலத்துக்கான பாஜக தேர்தல் பொறுப்பாளருமான அர்ஜூன் ராம் மேக்வால், மாநிலங்களவை உறுப்பினரும், தேர்தல் இணை பொறுப்பாளருமான ராஜிவ் சந்திரசேகர், பாஜக புதுச்சேரி மாநிலத் தலைவர் வி.சாமிநாதன், முன்னாள் அமைச்சர் ஏ.நமச்சிவாயம் ஆகியோர், செய்தி யாளர்களை சந்தித்தனர்.
அப்போது, அர்ஜூன் ராம் மேக்வால் கூறியது: புதுச்சேரியில் பாஜகவுக்கு ஆதரவான சூழ்நிலை உருவாகியுள்ளதை களத்தில் காண முடிகிறது. காங்கிரஸ்- திமுக கூட்டணி அரசை மக்கள் விரும்பவில்லை. பாஜக கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெற்று, மே மாதத்தில் ஆட்சி அமைக்கும் என்றார்.
முன்னாள் அமைச்சர் ஏ.நமச்சி வாயம் கூறியது: நாராயணசாமி தலைமையிலான அரசு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறை வேற்றவில்லை. இந்த அரசில் நானும் ஒரு அங்கமாக இருந்துள்ளதை நினைத்து வேதனையடைகிறேன் என்றார்.
பாஜக மாநிலத் தலைவர் வி.சாமிநாதன் கூறியது: 50 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசு புதுச்சேரிக்கு எதுவுமே செய்ய வில்லை. நாராயணசாமி தலைமையிலான அரசு, மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த வில்லை. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அளிப்பது குறித்து கட்சியின் தேசிய தலைமைதான் முடிவெடுக்கும். மக்களின் விருப் பம் எதுவோ அதற்கான குரலை புதுச்சேரி பாஜக எழுப்பும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago