மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக்கொடைவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் பார்வையிட்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற இக்கோயிலில் மாசிக்கொடை விழா இன்று(28-ம் தேதி) தொடங்கி மார்ச்9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநவ் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்டஆட்சியர் மா.அரவிந்த் ஆய்வு செய்தார். பக்தர்களுக்கு தேவையானபாதுகாப்பு ஏற்பாடுகள், தங்கும்விடுதிகள், பேருந்து வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்போதிய அளவுக்கு செய்யப்பட்டுள்ளதா என்பதை பார்வையிட்டார்.
மேலும், கடலில் நீராடும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் செய்யப்பட்டுள்ள பணிகள் மற்றும் மின்சாரம், தீயணைப்பு, சுகாதாரத்துறை வாயிலாக மேற்கொள்ளப்பட்டிருக் கும் பணிகளையும் பார்வையிட்டார்.
பக்தர்களுக்கு இடையூறு இருந்தால் அவற்றை மாவட்ட நிர்வாகத்துக்கும், உயர் அலுவலர்களுக்கும் தெரியப்படுத்தி, உரிய நடவடிக்கை மேற்கொண்டு நிவர்த்தி செய்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது குளச்சல் ஏஎஸ்பி. விஸ்வேஸ் சாஸ்திரி, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன், கல்குளம் வட்டாட்சியர் ஜெகதா வேணு, மண்டைக்காடு கோயில் செயல் அலுவலர் கலாராணி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago