தி.மலை அடுத்த வேங்கிக்காலில் மாவட்ட அரசு அருங்காட்சிய கத்தை முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தமிழ்நாடு அரசு அருங்காட்சிய கத் துறை மூலம் ரூ.1 கோடியில் மாவட்ட அரசு அருங்காட்சியகம் தி.மலை அடுத்த வேங்கிக்காலில் அமைக்கப்பட்டுள்ளது. இது, தமிழகத்தின் 22-வது அரசு அருங்காட்சியகம். 23 ஆயிரம் சதுரடியில்அமைந்துள்ள அருங்காட்சியகத் தில் சமூகம், பொருளாதாரம், அரசியல், கலை, அறிவியல் உட்பட 7 வகையான வரலாறுகள் மற்றும் மாவட்டத்தில் உள்ள பழங்கால மற்றும் வரலாற்று சுவடுகளை வரிசைப்படுத்தி காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மெய்நிகர் வாசிப்புடன் அமைக்கப் பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தை காணொலி காட்சி மூலமாக முதல்வர் பழனிசாமி நேற்று முன்தினம் திறந்து வைத்தார். பின்னர், குத்துவிளக்கு ஏற்றி வைத்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி, அருங்காட்சியகத்தை பார்வையிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago