திருவண்ணாமலை மாவட்டத்தில் 3-வது நாளாக நேற்று அரசு பேருந்துகளின் சேவை முடக்கப் பட்டது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொமுச, சிஐடியு உட்பட 9 தொழிற்சங்கத்தை சேர்ந்த அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் கடந்த 25-ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். அவர் களது போராட்டம் நேற்று நேற்று 3-வது நாளாக தொடர்ந்தது. இதனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் குறைந்த அளவே அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. பேருந்துகள் இல்லாமல் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அத்தியாவசிய தேவைக்காக வெளியூர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே இயக்கப்படும் தனியார் பேருந்துகளின் வருகைக்காக பல மணி நேரம் பயணிகள் காத்திருந்து பயணித்தனர். இந்நிலையில் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொழிற்சங்கத்தினர் திரும்ப பெற்றுள்ளனர். இதையடுத்து, நேற்று மாலையில் இருந்து அரசுப் பேருந்துகளின் இயக்கம் படிப்படியாக உயர்ந்தது. இருப்பினும் முழுமை பெறவில்லை. போக்கு வரத்து தொழிலாளர்கள் போராட் டம் முடிவுக்கு வந்துள்ளதால், அரசுப் பேருந்துகளின் சேவை இன்று முழுமையாக இருக்கும் என போக்குவரத்து கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago