வருவாய் கிராம ஊழியர்கள் உண்ணாவிரதம்

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கம் சார்பில், திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் கே.நடராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர்.சித்ரா, பொருளாளர் சத்தியசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பங்கேற்றவர்கள் பேசும்போது, ‘‘வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை வழங்க வேண்டும். இயற்கை இடர்பாடு காலங்களில் சிறப்பு படி வழங்க வேண்டும், பொங்கல் போனஸ் நாள் கணக்கில் வழங்க வேண்டும், இரவுக் காவல் பணியை நிறுத்த வேண்டும்.

கிராம நிர்வாக அலுவலர் பதவி 20 சதவீதம் என்பதை 30 சதவீதமாக வழங்க வேண்டும். பணிமூப்பு காலங்களை 10 ஆண்டுகள் என்பதை 6 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். கிராம ஊழியர்கள் ஓய்வு பெறும்போது, கடைசியாக பெறும் ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கிராம உதவியாளர்கள் பணியை, தமிழ்நாடு தேர்வாணையம் மூலமாக நிர்ணயம் செய்ய வேண்டும்’’ என்றனர்.

நீலகிரி மாவட்டம் உதகை மத்தியப் பேருந்து நிலையம் முன்பு நடந்த போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஏ.அப்துல் மஜீத் தலைமை வகித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்