பழங்கரை பஞ்சாயத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டத்துக்கு உட்பட்ட பழங்கரை பஞ்சாயத்து அலுவலகத்தில், வீட்டுமனை அப்ரூவலுக்கு லஞ்சம் பெறப்படுவதாக மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. துணைக் காவல் கண்காணிப்பாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் ஆய்வாளர் கவுசல்யா உள்ளிட்டோர் அடங்கிய லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று மாலை திடீரென அலுவலத்துக்குள் புகுந்து சோதனை நடத்தினர்.
இதில், கணக்கில் வராத ரூ.25 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக பஞ்சாயத்து செயலாளர் ஆர்.செல்வம் மற்றும் அலுவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று இரவு வரை சோதனை தொடர்ந்தது.
லஞ்ச ஒழிப்புத் துறையினர் கூறும்போது, ‘‘பஞ்சாயத்து செயலாளர் செல்வம், உதவியாளர் சங்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago