கிருஷ்ணகிரி மாவட்டம் போகனப்பள்ளி, கொங்கன்செருவு கிராமங்களில் எருதுவிடும் திருவிழா நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் பட்டலப்பள்ளி கொங்கன்செருவு கிராமத்தில் நேற்று எருதுவிடும் விழா நடைபெற்றது.
கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் இருந்தும், அண்டைய மாநிலமான ஆந்திராவில் இருந்தும் 250-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. போட்டியில் பங்கேற்கும் காளைகள் கால்நடை பராமரிப்புத் துறையினரின் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் பங்கேற்க அனுமதிக் கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தடுப்புகளுக்கு இடையே ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. அந்த காளைகளை ஒரு குறிப்பிட்ட தூரம் வரை ஓட விட்டு, அதில் எந்த காளை குறைந்த நேரத்தில் ஓடிக் கடந்தது என்பதை ஸ்டாப் வாட்ச் மூலம் கணக்கிட்டு, அந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
இதேபோன்று, கிருஷ்ணகிரி அடுத்த போகனப்பள்ளி கிரா மத்தில் நடந்த எருதுவிடும் விழா 250-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
இதில் குறைந்த நேரத்தில் ஓடிய காளைகளின் உரிமை யாளர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசாக ரூ. 70 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 60 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 50 ஆயிரம் என மொத்தம் 55 காளைகளின் உரிமையாளர்களுக்கு சுமார் ரூ.7 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. இவ்விழாவில் 10 பேர் காயம் அடைந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago