வருவாய் கிராம ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரியில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில், தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர்கள் விஜயலட்சுமி, கோவிந்தராஜ், மாவட்ட இணை செயலாளர்கள் சுகேந்திரன், குமரேசன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலைவாணன், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சின்னசாமி கோரிக்கை விளக்கவுரையாற்றினார்.

இதில், வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். இயற்கை இடர்பாடு காலங்களில் சிறப்பு படி வழங்க வேண்டும்.

பொங்கல் போனஸ் நாள் கணக்கில் வழங்க வேண்டும். இரவு காவல் பணியை நிறுத்த வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு 20 சதவீதம் என்பதை 30 சதவீதமாக வழங்க வேண்டும். பணிமூப்பு காலம் 10 ஆண்டுகள் என்பதை 6 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்