போச்சம்பள்ளி வட்டத்தில் தென்னை மரங்களில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத் துள்ளனர்.
கரோனா நோய் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் முதல் சமூக இடைவெளியைப் பின்பற்றி காணொலி மூலம் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் 11 மாதங்களுக்குப் பின்னர், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடந்தது. ஏற்கெனவே பெறப்பட்ட 62 மனுக்கள் மீது கூட்டத்தில் விவாதம் நடந்தது. இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:
யானைகளால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். போச்சம்பள்ளி வட்டத்தில் தென்னை மரங்களில் பூச்சித் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனைக் கட்டுப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரி, குளங்களுக்கு மழைக் காலங்களில் தண்ணீர் தடையின்றி செல்ல நீர்வழித்தட ஆக்கிர மிப்புகளை உடனே அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த ஆட்சியர், தொடர்புடைய அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஓசூர் அதியமான் வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகள், பஞ்சகாவியா, ஜீவாமிர்தம், மண்புழு உரம் அமிர்த கரைசல், வேஸ்ட் டீ கம்போசர், உழவன் செயலி, மஞ்சள் ஒட்டும் பொறி, வேப்பெண்ணை கரைசல், தசகாவியா, விதை நேர்த்தி, செறிவூட்டப்பட்ட மண்புழு நீர் ஆகியவற்றைப் பற்றி விவசாயி களுக்கு விளக்கமளித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ், மாவட்ட வன அலுவலர் பிரபு, இணை இயக் குநர்கள் வேளாண்மைத் துறை ராஜேந்திரன், தோட்டக்கலைத் துறை உமாராணி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago