ஆவத்தவாடி கிராமத்தில் கோயில் திருவிழா

By செய்திப்பிரிவு

ஆவத்தவாடி கிராமத்தில் நடந்த கோயில் திருவிழா நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் ஆவத்தவாடி, சுண்டகாப்பட்டி, மோட்டூர் கிராம மக்கள் சார்பில் திரவுபதியம்மன், செல்லியம்மன், மாரியம்மன், காளியம்மன் கோயில் தேர்த் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டில் கோயில் தேர்த் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது.

முதல் நாள் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று கோயில் பூசாரி , கரகம் சுமந்த படி மேளதாளங்கள் முழங்க கோயிலுக்கு வந்தார்.

அப்போது, ஆண்களும், பெண்களும் திருமணம் யோகம், குழந்தை வரம் உள்ளிட்ட வேண்டுதல் நிறைவேற வேண்டி தரையில் படுத்துக் கொள்ள, கரகம் எடுத்து வந்த பூசாரி பக்தர்கள் மீது நடந்து சென்றார். பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

இதையடுத்து கோயில் முன்பு காவல் காத்து வரும் குதிரை சிலைக்கு கொள்ளு ஊற்றும் நிகழ்ச்சி நடந்தது. இரவு வாண வேடிக்கையுடன் செல்லியம்மன் தலைக்கரகம் கூடும் நிகழ்ச்சி நடந்தது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்