திருத்தணி முருகன் கோயிலில் திருக்கல்யாணம்

By செய்திப்பிரிவு

திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயிலில் நடந்து வரும் மாசி பெருவிழாவில், நேற்று நடந்த திருக்கல்யாணம் நிகழ்வில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி கோயில், முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்குகிறது. திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மாசி பெருவிழா நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் மாசி பெருவிழா தொடங்கியது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளோடு எளிமையாக தொடங்கிய இவ்விழாவில், நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சுப்ரமணிய சுவாமி வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மாசி பெருவிழாவின் 7-ம் நாளான கடந்த 24-ம் தேதி மாலை தேர்த்திருவிழா, கோயிலின் மாடவீதிகளில் நடந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் குதிரை வாகனத்தில் சுப்ரமணியசுவாமி வீதி உலா சென்றார். தொடர்ந்து, நேற்று அதிகாலை சுப்ரமணிய சுவாமி- வள்ளி திருக்கல்யாண விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும், இன்று (27-ம் தேதி) கொடி இறக்கத்துடன் மாசி பெருவிழா நிறைவடைய உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்