காஞ்சிபுரத்தில் மருத்துவர், வண்ணார் உள்ளிட்ட குறுஞ் சமூகங்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு மருத்துவ சமூக நல சங்கம் மற்றும் முடிதிருத்துவோர் தொழிலாளர் நலச் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் காவலான் கேட் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ஏழுமலை தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் ஜி.எஸ்.சேகர், மூத்த பத்திரிகையாளர் டி.எஸ்.எஸ்.மணி, தமிழக வண்ணார் நல ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த க.தேவராஜன், விஜயகுமார், தமிழ்நாடு விவசாயிகள் இயக்கத்தைச் சேர்ந்த அருங்குன்றம் தேவராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மருத்துவர் சமூகத்தின் மீது தொடரும் வன்கொடுமைகளைத் தடுக்க கொத்தடிமை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று ஒரு நாள் முடிதிருத்தும் கடைகள் அடைக்கப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago