மூடியுள்ள ரேஷன் கடைகளுக்கு மாற்றாக புதிய முறை அமல் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தகவல்

By செய்திப்பிரிவு

புதுச்சேரி கடற்கரையில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் சிமெண்ட் இருக்கைகளை துணைநிலை ஆளுநர் தமிழிசை திறந்து வைத்தார்.

அங்கு வந்த அங்கன்வாடி ஊழியர்கள், “ஊதியம் குறைவாகஇருப்பதால் பாதிக்கப்பட்டுள் ளோம். ஊதிய உயர்வுக்காக வேலைநிறுத்த போராட்டத்தில் உள்ளோம்” என்று கண்ணீருடன் குறிப்பிட்டனர். “நான் முதலில் அங்கன்வாடிக்குத்தான் வந்தேன். கண்டிப்பாக நான் நடவடிக்கை எடுக்கிறேன்.

வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்புங்கள். ” என்றார். தொடர்ந்து நடமாடும் கழிவறை வண்டிகளை இயக்கி வைத்து ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

குழந்தைகளுக்கு சத்துணவு தேவை கேழ்வரகு, அரிசி மட்டும் போதாது என்பதால் வாரம் மூன்று முட்டை தர உத்தரவிட்டுள்ளேன். குழந்தைகளுக்கும், கர்ப் பிணிகளுக்கும் சத்துணவு தொகுப்பு தர திட்டம் தயாரித்து வருகிறோம். ரேஷன் கடைகள் மூடப்பட் டுள்ளது பற்றி விவாதித்தோம். ரேஷன் கடைகளை நியாயவிலைக் கடைகளாக மாற்றி தொடங்க திட்டமிட்டு வருகிறோம். இத்திட்டம் 50 சதவீதம் பூர்த்தியில் உள்ளது. அங்கு நியாயமான விலையில் அரிசி, பருப்பு, மளிகைப் பொருட்கள் வரும் திட்டமுள்ளது.

தற்போது நேரடி பணப் பரிமாற்ற முறை கொள்கை முடிவாக உள்ளது. அதை உடனே மாற்ற முடியாவிட்டாலும், பல துறைகளை ஆலோசித்து வருகிறேன். மக்களுக்காகத்தான் இத்திட்டங்கள். அதற்கு பதிலாக அரிசி தேவையானால் அவர்கள் விருப்பப்பட்டால் மத்திய அரசிடம் கோரிக்கை வைப்போம்.

தேர்தல் அறிவித்தாலும் முடங் கியிருந்த திட்டங்கள் தொடர நடவடிக்கை எடுக்கிறோம். அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு தருவது தொடர்பான கோப்புக்கு கையெழுத்திட்டு விட்டேன். காலை உணவு, இலவச பேருந்து வசதி ஆகியவை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தமிழகத்தைப் போல் புதுச்சேரியில் 9 , 10, 11-ம் வகுப்புகளை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கலாமா என்பது பற்றி கல்வித்துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து அறிவிக்கப்படும். தமிழ் தெரிந்த அதிகாரிகளை நியமிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை வைப்பேன். வேலை வாய்ப்புக்கு மிகப்பெரிய திட்டம் வரும் அதற்கான பணிகள் நடக்கிறது என்று குறிப்பிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்