கடலூர் நகராட்சி அலுவலகத்தை வாடகைதாரர்களின் கூட்டமைப்பினர் முற்றுகை

By செய்திப்பிரிவு

கடலூர் நகராட்சி அலுவலகத்தை வாடகைதாரர்களின் கூட்டமைப் பினர் முற்றுகையிட்டனர்.

கடலூர் நகராட்சி நிர்வாகம் உயர்த்தப்பட்ட வாடகையை உடனடியாக செலுத்துமாறு நிர்ப்பந்தம் செய்கிறது என வாடகைதாரர்களின் கூட்டமைப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

கரோனா தாக்கத்தால் ஏப்ரல், மே மாதங்களில் குறிப்பிட்ட சில கடைகளுக்கு மட்டும் வாடகை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள அனைத்து நகராட்சி கடைகளுக்கும் வாடகை விலக்கு அளிக்க வேண்டும். கரோனா ஊரடங்கால் மூடிவைக்கப்பட்ட கடலூர் பேருந்து நிலைய கடைகள், காந்தி மார்க்கெட் மஞ்சக்குப்பம் மார்க்கெட், முதுநகர் பக்தவச்சலம் மார்க்கெட் பகுதி கடைகளுக்கு 6 மாத கால வாடகை விலக்கு அளிக்க வேண்டும் என்றும் வாடகைதாரர்களின் கூட்டமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடலூர் நகராட்சி வாடகைதாரர் களின் கூட்டமைப்பு தலைவர் ராஜேந்திரன் தலைமையில் முன்னாள் கவுன்சிலர் தஷ்ணா, சட்ட ஆலோசகர் சுந்தர் உள்பட பலர் நேற்று நகராட்சி அலுவலகத்தில் திரண்டனர். அவர்கள், வாடகை விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து கூட்டமைப்பினர் போராட்டத்தை கைவிட்டு அதிகாரிகளிடம் மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்