கடந்த 10 ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் 12,483 பகுதிநேர ஆசிரியர்களை எவ்வித நிபந்தனையுமின்றி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடைபெற்றது. கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் இள.புகழேந்தி, கடலூர் நகர செயலாளர் ராஜா ஆகியோர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினர்.அரசுப் பணியாளர்கள் சங்க தலைவர் கு.பாலசுப்ரமணியன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன் விளக்கவுரை ஆற்றினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago