வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள் புதிய தொழில் தொடங்க அழைப்பு

By செய்திப்பிரிவு

கடந்த ஜன.1-ம் தேதிக்கு பின்னர், வெளிநாடுகளில் இருந்து நாகை மாவட்டத்துக்கு திரும்பியவர்களில், புதிய தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்களுக்காக புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தை நாகை மாவட்ட தொழில் மையம் செயல்படுத்தி வருகிறது.

எனவே, வெளிநாடுகளில் இருந்து நாகை மாவட்டத்துக்கு திரும்பியவர்கள், தொழில் தொடங்க விரும்பினால், மாவட்ட தொழில் மைய அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு தொழில் மைய அலுவலக பொது மேலாளரை நேரிலோ அல்லது 04365 251170 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொண்டு அறியலாம் என ஆட்சியர் பிரவீன் பி.நாயர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்