மண்வள அட்டையின் பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

By செய்திப்பிரிவு

காரைக்கால் மாவட்ட வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை சார்பில், விவசாயிகளுக்கான நிலைத்த, நீடித்த வேளாண்மைக்கு மண்வள அட்டை பரிந்துரைகள் குறித்த 2 நாள் பயிற்சி முகாம்கள் காரைக்கால், மேலகாசாக்குடி, நெடுங்காடு, சுரக்குடி, கோட்டுச்சேரி ஆகிய வருவாய் கிராமங்களில் நடத்தப்படுகின்றன.

முதல்கட்டமாக, காரைக்கால் விழிதியூர் கிராமத்தில் நேற்று முன்தினம் முகாம் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு, காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநர் ஜெ.செந்தில்குமார் தலைமை வகித்தார். துணை இயக்குநர் ஆர்.கணேசன் முகாமை தொடங்கிவைத்து, பயிற்சியின் நோக்கம் குறித்து பேசினார்.

காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி பேராசிரியர் முனைவர் ஆர்.சங்கர், மண்வள அட்டையின் முக்கியத்துவம் குறித்தும், முனைவர் ஏ.எல்.நாராயணன் பருத்தியில் உழவியல் மேலாண்மை குறித்தும் பேசினர். நடப்புப் பருவத்தில் உளுந்து, பயறு விதைப்பு குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இம்முகாமில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். முன்னதாக, வேளாண் அலுவலர் கே.மகேந்திரன் வரவேற்றார். நிறைவாக, வேளாண் அலுவலர் ஜி.வேம்பு நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்