காரைக்கால் அருகேயுள்ள அக்கரைவட்டம் கிராமத்தில், சவுந்தரவள்ளி சமேத சோமநாத சுவாமி தேவஸ்தானத்துக்கு சொந்தமான பழமைவாய்ந்த மகா காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு 100 ஆண்டுகளுக்குப் பின்னர் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு, திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன.
திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேகத்துக்கான முதல் கால யாக பூஜை கடந்த 24-ம் தேதி தொடங்கியது. நேற்று காலையுடன் 4 கால யாக பூஜைகள் நிறைவுபெற்று, மங்கள வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், காரைக்கால் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு, அம்மனை வழிபட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago