சமய நூல்களை கடந்து பேசப்படும் நூல் திருக்குறள் மயிலம் பொம்மபுர ஆதீனம் கருத்து

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு அரசின் உலக தமிழாராய்ச்சி நிறுவனம், தஞ்சாவூர் பாரத் அறிவியல் கல்லூரி, ஆஸ்திரேலியா மெல்பர்ன் தமிழ்ச் சங்கம், இளங்காடு நற்றமிழ்ச் சங்கம், தஞ்சாவூர் தமிழ்த்தாய் அறக்கட்டளை ஆகியவற்றின் சார்பில், மூன்றாவது உலக திருக்குறள் மாநாடு தஞ்சாவூரில் நேற்று தொடங்கியது. இம்மாநாடு தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறவுள்ளது.

தஞ்சாவூர் பாரத் அறிவியல் நிர்வாகவியல் கல்லூரியில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு, பாரத் கல்விக் குழுமச் செயலாளர் புனிதா கணேசன் தலைமை வகித்தார். மாநாட்டை மயிலம் பொம்மபுர ஆதீனம் சீர்வளர்சீர் சிவஞான பாலய சுவாமிகள் தொடங்கி வைத்துப் பேசியது:

பல சமயத் தலைப்புகளில் இறைவனைப் பற்றிப் பாடப்படுகின்ற நூல்கள் பல இருந்தாலும், அவற்றையெல்லாம் தாண்டி எல்லோராலும் பேசப்படுவது திருக்குறள்தான். ராமாயணத்திலும், மகாபாரதத்திலும் வாழ்க்கைக்கான நீதிகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் தாண்டி திருக்குறள் என்பது எக்காலத்துக்கும், எல்லோருக்கும் பொருத்தமுடையது என்றார்.

விழாவில், தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டு தமிழ்க் கல்வித் துறைத் தலைவர் இரா.குறிஞ்சிவேந்தன், தமிழ் வளர்ச்சித் துறை மண்டல துணை இயக்குநர் கா.பொ.ராசேந்திரன், துபை தமிழ்த்தேன் தமிழ் அமைப்புச் செயலாளர் ரமணிராசன், திண்டிவனம் வட்ட தமிழ்ச் சங்கத் தலைவர் துரை.ராசமாணிக்கம், விழுப்புரம் ஈ.எஸ். கல்விக் குழுமத் தலைவர் ஏ.சாமிக்கண்ணு, அம்மா தமிழ்ப்பீட நிறுவனர் ஆவடி குமார் உள்ளிட்டோர் பேசினர். நிகழ்ச்சியில், மாநாட்டு மலரும், ஒலி- ஒளி இசைப் பாடல் குறுந்தகடும் வெளியிடப்பட்டன. முன்னதாக, மாநாட்டுச் செயலாளர் உடையார்கோவில் குணா வரவேற்றார். முடிவில், முனைவர் ம.சின்னதுரை நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்