கடம்பூர்- கோவில்பட்டி இடையே 2-வது ரயில் பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

By செய்திப்பிரிவு

மதுரை முதல் தூத்துக்குடி வரை இரண்டாவது இருப்புப்பாதை அமைக்கும் பணி கடந்த 2018-ம்ஆண்டு தொடங்கியது. இதில் சாத்தூர் முதல் தூத்துக்குடி வரை ரூ.445 கோடியில் இருப்புப் பாதை அமைக்கும் பணியை கல்பதரு பவர் டிரான்ஸ்மிஷன் நிறுவனம் மேற்கொண்டு வந்தது.

ஏற்கெனவே கடம்பூர்- வாஞ்சி மணியாச்சி -தட்டப்பாறை வரை பணிகள் நிறைவு பெற்று, ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது. அடுத்த கட்டமாக கடம்பூர் முதல் கோவில்பட்டி வரை இரண்டாவது இருப்புப்பாதை பணிகள் நடைபெற்று வந்தன. இந்தப்பணிகள் நிறைவு பெற்ற நிலையில் நேற்று ரயில்வே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதனை முன்னிட்டுகோவில்பட்டி ரயில் நிலைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரண்டாவது இருப்புப் பாதை யில் பூஜைகள் நடத்தப்பட்டன.

தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபேகுமார் ராய், ஆர்விஎன்எல். திட்ட இயக்குநர் கமலகரன் ரெட்டி, மதுரை கோட்ட பொது மேலாளர் லெனின் மற்றும் அதிகாரிகள் 5 டிராலிகளில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இருப்புப்பாதைகளுக்கு இடையி லான நீளம், ரயில்வே கிராசிங்கில்உள்ள கேட்களின் உயரம், கேட்கீப்பர் அறைகள் உள்ளிட்டவற்றை மாலை 4 மணி வரைஆய்வு செய்தனர். தொடர்ந்து, நாளை கடம்பூர் முதல் கோவில்பட்டி வரை அதிவேகரயில் சோதனை நடத்தப்படும் என தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்