குமரியில் 2-வது நாளாக வனவிலங்குகள் கணக்கெடுப்பு

By செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் வனத்துறை சார்பில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி நேற்றுமுன்தினம் களியல், வில்லுக்குறி, குலசேகரம், அழகியபாண்டியபுரம், பூதப்பாண்டி ஆகிய வனப்பகுதிகளில் நடைபெற்றது.

மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் மேற்பார்வையில், வனஅலுவலர்கள், விலங்குகள் ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் அடங்கிய 26 குழுவினர் கணெக்கெடுப்பு பணியை மேற்கொண்டனர். முதல் நாளில் யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட குறைந்த அளவிலான விலங்குகள் மட்டும் தென்பட்டன. நேற்று மிளா, கரடி ஆகியவற்றின் எச்சங்கள், கால்தடங்களை வனத்துறையினர் சேகரித்தனர். காலை மற்றும் மாலை வேளைகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

நிறைவுநாள் கணக்கெடுப்பு பணி இன்று நடைபெறவுள்ளது. தொடர்ந்து 26 குழுவினரிடம் இருந்தும் வனவிலங்குகள் குறித்த விவரம் சேகரிக்கப்பட்டு குமரி மாவட்ட வனப்பகுதிகளில் எத்தனை வன விலங்குகள் உள்ளன என்பது குறித்த விவரங்களை வனத்துறையினர் தெரியப்படுத்துவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்