மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்

By செய்திப்பிரிவு

தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநகரச் செயலாளர் டி.ராஜா தலைமை வகித்தார். ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.முத்து, ஒன்றியச் செயலாளர் சங்கரன் உள்ளிட்டோர் மாநகராட்சி அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கோக்கூர், கதிர்வேல்நகர், ராஜீவ் நகர் (வடக்கு, தெற்கு), பாக்கியலெட்சுமி நகர், அன்னை தெரசா நகர், எஸ்பிஎம் நகர், பாரதிநகர், பாக்கியலெட்சுமி நகர், புஷ்பா நகர், பாலபாண்டி நகர், அன்னை தெரசா நகர், நிகிலேசன் நகர், செல்வவிநாயகர் தெரு, வி.எம்.எஸ். நகர் (வடக்கு, தெற்கு), சின்னகன்னுபுரம், நேதாஜிநகர், தேவர்காலனி உள்ளிட்ட பலபகுதிகள் அண்மையில் பெய்ததொடர் கனமழையால் கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் தார் சாலை என்பதே இல்லை.2015 முதல் மழை வரும் போதெல்லாம் இப்பகுதிகள் கடுமையாக பதிக்கப்படுகின்றன. எனவே, மழைக்காலங்களில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வெள்ளநீர் வடியும் வகையில் வடிகால் அமைத்து பக்கிள் ஓடையில் இணைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்