கிராம ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்

By செய்திப்பிரிவு

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். இயற்கை இடர்பாடு காலங்களில் சிறப்பு படி வழங்க வேண்டும். கிராம உதவியாளர்கள் பணியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் சங்கர் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் பிச்சாண்டி உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் ரமணன் வரவேற்றார். மாநில செயலாளர் பெருமாள் மற்றும் முன்னாள் மாநிலத் தலைவர் அன்சர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

வேலூர்

இதே கோரிக்கைகளை வலியு றுத்தி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெற்றது.

போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் வரவேற்றுப் பேசினார். மாநில துணைத் தலைவர் ரவி சிறப்புரையாற்றினார். இதில், பங்கேற்றவர்கள் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நேற்று தமிழ்நாடு வருவாய்த் துறைகிராம உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிராம உதவியாளர்கள் 70-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்