நச்சுக் கழிவுகளுக்கு தீ வைப்பதால் சுகாதாரக் கேடு

By செய்திப்பிரிவு

உடுமலை நூறடி சாலையின் இருபுறமும் வாகனங்கள் பழுதுபார்க்கும் தனியார் ஒர்க்‌ஷாப்கள், பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் கொள்முதல் செய்யும் வியாபார நிறுவனங்கள் உள்ளன. இவர்கள் பழைய பிளாஸ்டிக் பொருள் கழிவுகளை சாலை ஓரத்திலேயே தினமும் தீ வைத்து அழித்துவருகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “குடியிருப்புகள், அலுவலகங்கள், மருத்துவமனைகள், பூங்கா உள்ள பகுதியில் தினமும் பழைய பிளாஸ்டிக் பொருட்களை தீ வைத்து எரித்துவருகின்றனர். இதுகுறித்து சுட்டிக்காட்டினாலும் தொடர்ந்து அதே தவறை செய்துவருகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். நகர் நலத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “நகரில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்