ஈரோடு பெருந்துறை சாலை வண்ணாங்காட்டுவலசு பகுதியில் இந்து இன்டர்நேஷனல் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி புதுச்சேரியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஆச்சார்யா கல்விக்குழுமத்துடன் இணைக்கப் பட்டுள்ளது. இதற்கான விழா அப்பள்ளி வளாகத்தில நேற்று நடந்தது. விழாவுக்கு இந்து இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளர் கே.கே.பாலுசாமி தலைமை தாங்கினார். ஆச்சார்யா கல்விக்குழுமத்தின் தாளாளர் ஜெ.அரவிந்தன் பள்ளியின் செயல்பாடுகள் குறித்துப் பேசினார்.
இதில், இந்து இன்டர்நேஷனல் பள்ளியின் பொருளாளர் அருண்குமார், மேலாண்மை இயக்குநர் பிரதீப்குமார், பள்ளியின் முதல்வர் ஆண்டனி ராபர்ட் கென்னடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா முடிவில் பள்ளியின் துணை முதல்வர் சையது அலி பாத்திமா நன்றி கூறினார்.
இந்த இணைப்பின் மூலம் இந்து இன்டர்நேஷனல் பள்ளி கல்வித்திட்டம் முழுமையும் சி.பி.எஸ்.இ. பாடதிட்டத்துடன், ஆச்சார்யா கல்விக்குழுமத்தின் பாடத்திட்டப்படி மாணவ, மாணவிகளுக்கு கற்பிக்கப்படஉள்ளது. சிறப்பாக படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டால், அவர்களுக்கு முற்றிலும் இலவச கல்வி அளிக்கப்பட உள்ளது. புதிய இணைப்பு மூலம் இந்து இன்டர்நேஷனல் பள்ளி, ஆச்சார்யா கல்விக்குழும பள்ளிகளின் தரத்துக்கு நிகராக கல்வி மற்றும் அனைத்துத் துறைகளிலும் உயரும் என பள்ளியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago