நாமக்கல் திருச்சி சாலையில் தங்கம் மருத்துவமனை வளா கத்தில் சர்வதேச தரத்திலான தங்கம் கேன்சர் சென்டர் 150 படுக்கை வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் செயல்படும் மருத்துவ மனைகளுக்கு இணையாக அனைத்து வசதிகளுடன் கேன்சர் நோயாளிகளுக்கு முழுமையான அனைத்து சிகிச்சைகளும் அளிக்கும் வகையில் சிறப்பு மருத்துவர்கள் இங்கு பணியாற்றி வருகின்றனர்.
இதன் திறப்பு விழாவிற்கு சீனியர் மருத்துவ நிபுணர் டாக்டர் குழந்தைவேல் தலைமை வகித்தார். டாடா குழும சேர்மன் சந்திரசேகரன், மும்பை டாடா மெமோரியல் கேன்சர் மைய சிறப்பு நிபுணர் டாக்டர் ராஜேந்திர பத்வே, கோவை கட்டிடக்கலை நிபுணர் ரமணிசங்கர் ஆகியோர் புதிய கேன்சர் மையத்தை திறந்து வைத்தனர். கொல்கத்தா மெடிக்கா ஆஸ்பிட்டல் தலைவர் அலோக்ராய், நாமக்கல் டிரினிடி மகளிர் கல்லூரி தலைவர் செங்கோடன், செயலாளர் தென்பாண்டி யன் நல்லுசாமி உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து டிரினிடி மகளிர் கல்லூரியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறிவியல் அரங்கத்தை டாடா குழும சேர்மன் சந்திரசேகரன் திறந்து வைத்தார். மேலும், நாமக்கல் தமிழ்ச்சங்கம் சார்பில் தரணி போற்றும் தமிழர் என்ற விருது டாடா குழும சேர்மன் சந்திரசேகரனுக்கு வழங்கப்பட்டது. தங்கம் கேன்சர் சென்டர் சிறப்பு மருத்துவர்கள் சரவணராஜமாணிக்கம், தீப்தி மிஸ்ரா, கார்த்திக் ராஜலிங்கம், தீபன், சுபா, பாவேஷ், அருணா பிரபு, பொது மருத்துவர்கள் மல்லிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago