விழுப்புரம் மாவட்டத்தில் நிவர் புயலால்1,626 ஹெக்டர் பயிர்கள் பாதிக்கப்பட்டன. 2,932 விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
இதில், இதுவரை 2,827 விவசாயிக ளுக்கு நிவாரணமாக ரூ. 2.42 கோடி வழங்கப்பட்டுள்ளது.
புரெவி புயலால் 7,407 ஹெக்டர் பயிர்கள் பாதிக்கப்பட்டன. 15,780 விவ சாயிகள் பாதிக்கப்பட்டனர். இதுவரை 15,643 விவசாயிகளுக்கு ரூ. 10.02 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் பருவம் தவறி பெய்த மழையினால் 12,012 ஹெக்டர் பயி்ர்கள் பாதிக்கப்பட்டன. 29,757 விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.இதுவரை 25,628 விவசாயிகளுக்கு ரூ. 15.72 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை மொத்தமாக புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட 44,098விவசாயிகளுக்கு ரூ 28.16 கோடி நிவார ணம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 4,371 விவசாயிகளின் வங்கி கணக்கு விவரம் சரிபார்க்கப்பட்டு ரூ.2.80 கோடி நிவாரணம் வழங்கப்பட உள்ளதாக விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago