மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த ராஜசேகரன், உயர் நீதி மன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: வெம்பக்கோட்டை அருகே மாரியம்மன் பட்டாசு ஆலையில் பிப்.12-ல் ஏற்பட்ட விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர்.
பல பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் எடுப்பதில்லை. மாரியம்மன் பட்டாசு ஆலை வெடிவிபத்து தொடர்பாக விசாரிக்க தனி விசாரணை ஆணையம் அமைக்கவும், விதிகளை மீறும் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்யவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதை தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஹேமலதா விசாரித்தனர். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் கே.விநாயகன், கே.நீலமேகம் வாதிட்டனர்.
நீதிபதிகள் தங்கள் உத்தரவில், தமிழக அரசு பட்டாசு தொழிலை முறைப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? பிப். 12-ல் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு எவ்வளவு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்தனர். அடுத்த விசாரணையை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago