எஸ்.வி.மங்கலம் ருத்ரகோடீசுவரர் கோயில் மாசிமக தேரோட்டம்

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.வி.மங்கலத்தில் (சதுர்வேதமங்கலம்) குன்றக்குடி ஆதீனத்துக்கு உட்பட்ட ஆத்ம நாயகி ருத்ரகோடீசுவரர் கோயில் மாசிமகத் திருவிழா பிப்.17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஒன்பதாம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. பிரியாவிடை யுடன் ருத்ரகோடீசுவரர் பெரிய தேரிலும், ஆத்ம நாயகி அம்பாள் சிறிய தேரிலும், விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேசுவரர் சப்பரங்களிலும் எழுந்தருளினர். சிறப்பு வழிபாட்டுக்குப் பின் மாலை 5 மணிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்தனர். நான்கு ரத வீதிகளில் சென்ற தேரை பெண்கள் கும்மியடித்து வரவேற்றனர். மாலை 6 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்