புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. ஆளுநர் தமிழிசையிடம் நாராயணசாமி ராஜினாமா கடிதத்தை அளித்தார். அவரும் அதை ஏற்றுக்கொண்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். நாராயணசாமி ராஜினாமா செய்த பிறகு எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை. இதையடுத்து சட்டப்பேரவையை முடக்கி வைத்து துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டார். நாராயணசாமியின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதற் கான கோப்பு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று மாலை புதுச்சேரி சட்டப்பேரவை கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு நேற்று இரவு அறிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago