ஈரோடு மாவட்டத்தில் ஏற்றுமதி முனையம் அமைக்க வேண்டும் ஈடிசியா பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டத்தில் ஏற்றுமதி முனையம் அமைக்க வேண்டும், என ஈரோடு மாவட்ட சிறு தொழில் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்ட சிறு தொழில் கள் சங்கத்தின் (ஈடிசியா) 38-வது பொதுக்குழுக் கூட்டம், சங்கத்தின் முன்னாள் தலைவர் சரவணன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஈரோடு மாவட்டம் சிப்காட் அல்லது பெருந்துறை அருகில் ஏற்றுமதி முனையம் அமைக்க வேண்டும். ஜி.எஸ்.டி.யில் பணத்தினை திரும்பப்பெறும் கொள்கையை எளிமைப்படுத்த வேண்டும். துணி பைக்கான ஜி.எஸ்.டி. வரி விதிப்பை 5 சதவீதம் குறைக்க வேண்டும்.

உணவுப்பொருள் உற்பத்தி மற்றும் அவை சார்ந்த தொழில்களின் நலனுக்காக மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் கிளையை ஈரோட்டில் அமைக்க வேண்டும். வங்கி பரிமாற்றத்திற்கு இடையூறு இல்லாமல், வங்கிகள் விடுமுறை இரண்டு நாட்களுக்கு மேல் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாராக்கடன் கால நிர்ணயம் 6 மாதம் என்ற முறையை நிரந்தர மாக்க வேண்டும்அனைத்துப் பகுதிகளிலும் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். தொழில் முனைவோர் குறைகளைத் தீர்க்க, இரு மாதங் களுக்கு ஒருமுறை,ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடத்தவேண்டும்உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள்

முன்னதாக சங்கத்தின் முன்னாள் பொருளாளர் ராம்பிரகாஷ், சங்கத்தின் ஓராண்டு வரவு செலவு கணக்கை சமர்ப்பித்தார்.

இதைத்தொடர்ந்து ஈடிசியாவின் புதிய நிர்வாகக் குழு தலைவராக சக்தி புருட்ஸ் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பி.திருமூர்த்தி, துணைத்தலைவராக வி.டி.தர், செயலாளராக மில்காவொண்டர் கேக்கின் நிர்வாக இயக்குநர்ஆர்.ராம்பிரகாஷ், பொருளாளராக எஸ்.பழனிவேல், இணை செய லாளராக ஏ.சரவணபாபு ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்