கும்பகோணம் மகாமக குளக்கரையில் இன்று மாசிமக தீர்த்தவாரி

By செய்திப்பிரிவு

மாசிமக திருவிழாவை முன்னிட்டு, கும்பகோணம் மகாமக குளக்கரையில் 12 சிவன் கோயில் உற் சவர்கள் தீர்த்தவாரி கண்டருளும் நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ளது. இதில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணத்தில் மகாமகத்துடன் தொடர்புடைய ஆதிகும்பேஸ்வரர், காசி விஸ்வநாதர், வியாழசோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், அபிமுகேஸ் வரர், கவுதமேஸ்வரர் ஆகிய 6 சிவன் கோயில்களில் மாசிமக பெருவிழா கடந்த பிப்.17-ம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

இதேபோல, சக்கரபாணி சுவாமி, ராஜகோபால சுவாமி, ஆதிவராக பெருமாள் ஆகிய பெருமாள் கோயில்களில் கடந்த பிப்.18-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

இந்நிலையில், ஆதிகும்பேஸ் வரர் கோயிலில் சண்டிஸ்கேஸ்வரர் சுவாமி தேரோட்டம் தேரோடும் வீதிகளிலும், வியாழசோமேஸ்வரர் கோயில் தேரோட்டம் அந்தக் கோயிலை சுற்றியும் நேற்று நடைபெற்றது. இதேபோல, காசி விஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர் ஆகிய 3 சிவன் கோயில்களின் உற்சவர் சுவாமி- அம்மன் ஆகியோர் தேரில் எழுந்தருள, மகாமகக் குளக்கரையில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

தொடர்ந்து, இன்று(பிப்.26) காலை 8 மணிக்கு சக்கரபாணி சுவாமி கோயில் தேரோட்டம் நடைபெறுகிறது. இதேபோல, சாரங்கபாணி சுவாமி கோயிலின் தெப்ப உற்சவம் இன்று காலை 2 சுற்றும், இரவில் மின்னொளியில் ஒரு சுற்றும் நடைபெறுகிறது. தெப்பத்தில் உபயநாச்சியாருடன் சாரங்கபாணி சுவாமி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோயில் செயல் அலுவலர்கள் செய்துவருகின்றனர்.

புனித நீராட தடை

கும்பகோணத்தில் மாசிமக விழாவின் முக்கிய நிகழ்வாக, மாசிமகம் தொடர்பான 12 சிவால யங்களிலிருந்தும் சுவாமியும், அம்மனும் ரிஷப வாகனங்களில் புறப்பட்டு, மகாமக குளத்தின் 4 கரைகளிலும் எழுந்தருளி, தீர்த்தவாரி கண்டருளும் நிகழ்ச்சி இன்று(பிப்.26) பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது. இதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மகாமக குளக்கரையில் நேற்று ஆய்வு செய்த தஞ்சாவூர் எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய், செய்தி யாளர்களிடம் கூறியது:

மாசிமக திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மகாமக குளத்தின் அருகில் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, 6 இடங்களில் வாகனங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குளக்கரையில் நவீன கட்டுப் பாட்டு அறை அமைக்கப்பட்டுள் ளது. 32 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. ஒலிப்பெருக்கி மூலம் தகவல்களை தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மகாமக குளத் தில் பக்தர்கள் புனித நீராட அனுமதியில்லை. அதேநேரம் குளத்துக்கு பக்தர்கள் சமூக இடைவெளியுடன் வரலாம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்