நாகை மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க செயலாளர் ஏ.டி.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக சட்டப்பேரவையில், 110 விதியின் கீழ் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி தமிழக முதல்வர் அறிவித்திருப்பதை அரசு ஊழியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழக அரசு துறைகளில் 4.5 லட்சம் பணியிடங்கள் தொடர்ந்து காலியாக இருக்கும் நிலையில், இத்தகைய அறிவிப்பு இளைஞர்கள் மத்தியில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல இருக்கிறது. இந்தக் கோரிக்கையை அரசிடம் எந்த அரசு ஊழியர் அமைப்பும் முன்வைக்கவில்லை.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராடிக் கொண்டிருக்கும்போது, அந்தக் கோரிக்கைகளை பரிசீலிக்காமல், இப்படி அறிவித்திருப்பது அரசு ஊழியர்கள் மத்தியில் மிகுந்த கோபத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே, இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago