கோயம்புத்தூர் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் சார்பில் தொழில்முனைவோருக்கு விருது

தேசிய மேலாண்மை தினத்தை முன்னிட்டு, தொழில்துறையில் சிறந்து விளங்கும் தொழில்முனைவோர், மேலாண்மைத் துறை பேராசிரியர்களுக்கு கோயம்புத்தூர் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் (சிஎம்ஏ) சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன.

இதில், சிஎம்ஏ-ரூட்ஸ் சிறந்த தொழில்முனைவோருக்கான விருது திருப்பூர் பெஸ்ட் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குநர் ராஜ்குமார் ராமசாமிக்கும், சிஎம்ஏ-மகேந்திரா சிறந்த சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோருக்கான விருது கோயம்புத்தூர் ‘யூனிக் ஷெல் மோல்டு' நிர்வாக இயக்குநர் ராம்பிரகாஷுக்கும், சிஎம்ஏ-ஜிஆர்ஜி சிறந்த பெண் தொழில்முனைவோருக்கான விருது கோவை ராமகிருஷ்ணா குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி ஸ்வாதி ரோஹித்துக்கும், சிஎம்ஏ-க்குவாட்ரா சிறந்த ஸ்டார்ட்-அப் விருது ‘கோயம்புத்தூர் லேமேன் அக்ரோ வென்ச்சர்ஸ்' துணை நிறுவனர் ஷர்மிளா செல்வகுமாருக்கும், சிஎம்ஏ-டிஜே சிறந்த ‘கார்ப்பரேட் லீடர்' விருது கோவை ‘கேஜி இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ்' (கேஜிஐஎஸ்எல்) இயக்குநர், முதன்மை செயல் அதிகாரி ஜெயமுரளி பாலகுருசாமிக்கும், சிஎம்ஏ-ஜிஆர்டி சிறந்த மேனேஜ்மென்ட் ஃபேகல்டி விருது கோவை கேசிடி பிசினஸ் ஸ்கூல், குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி உதவிப் பேராசிரியர் எஸ்.ஜெய்சங்கருக்கும் வழங்கப்பட்டன.

விழாவில், மேட்ரிமோனி.காம் நிறுவனத் தலைவர் முருகவேல் ஜானகிராமன் சிறப்புரையாற்றினார். சிஎம்ஏ தலைவர் ஜெயக்குமார் ராம்தாஸ், முன்னாள் தலைவர்கள் சி.ஆர். சுவாமிநாதன், டாக்டர் ஓ.ஏ.பாலசுப்ரமணியம், பிரசாந்த் சுப்ரமணியம், யு.கே.அனந்தபத்மநாபன், வி.எம்.ஜெகதீசன், என்.கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். சிஎம்ஏ செயலர் நித்யானந்தன் ஜெயராஜ் நன்றி கூறினார்.l

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE