பாலக்கோடு புதூர் பொன் மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் பிரசித்தி பெற்ற புதூர் பொன் மாரியம்மன் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் பவுர்ணமியையொட்டி நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டில் திருவிழா கடந்த 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நாளான நேற்று அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இவ்விழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், தீச்சட்டி எடுத்தும், தீ மிதித்தல், பூங்கரகம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் சிலர் அம்மன், காளி வேடம் அணிந்து சென்றனர். மேலும், சிலர் அந்தரத்தில் தொடங்கியப்படி சென்று அம்மனை வழிபட்டனர். திவுரபதி அம்மன் கோயிலில் இருந்து 2 கிமீ தூரத்துக்கு பெண்கள் மாவிளக்கு ஊர்வலமாக சென்று புதூர் மாரியம்மன் கோயிலில் வழிபாடு நடத்தினர்.
இவ்விழாவினையொட்டி, அம்மனுக்கு கோழி, ஆடு பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இவ்விழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இவ்விழாவிற்காக மாவட்ட நிர்வாகம் பாலக்கோடு பகுதியில் உள்ளூர் விடுமுறை அளித்திருந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago