ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினருக்கு கரோனா தடுப்பூசித் திட்டத்தில் ‘கோவிஷீல்டு' தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நேற்று காவல்கண்காணிப்பாளர் அலுவலகவளா கத்தில் நடைபெற்ற முகாமில் தடுப்பூசி போட்டுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுக்கும் வகையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 8 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டப் பேரவைத் தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 292 பேரிடம் நன்னடத்தை உறுதிமொழிப் பத்திரம் எழுதி வாங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago