கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சந்திர சூடேஸ்வரர் கோயிலில் ஆண்டு தோறும் பிப்ரவரி - மார்ச் மாதத்தில் தேர்த் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 22-ம் தேதி கொடியேற்றமும், 27-ம் தேதிய திருக்கல்யாண உற்ஸவமும், மார்ச் 28-ம் தேதியன்று 80 அடி உயரமுள்ள ரத உற்ஸவ விழாவும் நடைபெற உள்ளது. தேர்த்திரு விழாவை முன்னிட்டு மலை அடிவாரத்தில் உள்ள தேர்ப் பேட்டை விநாயகர் கோயிலில் 80 அடி உயரமுள்ள பெரிய தேர் மற்றும் 50 அடி உயரமுள்ள சிறிய தேர் கட்டும் பணிக்காக சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து தேர்த் திருவிழா பணிகள் தொடங்கியதற்கான பால் கம்பம் நடப்பட்டது.
பால் கம்பம் சிறப்பு பூஜையில் சந்திரசூடேஸ்வரர்கோயில் தேர்க் குழு தலைவர் கே.ஏ.மனோகரன், முன்னாள் எம்எல்ஏ கோபிநாத், சந்திர சூடேஸ்வரர் கோயில் செயல் அலுவலர் ஜோதி, முன்னாள் நகர மன்ற தலைவர் மாதேஸ்வரன், பாஜகமாவட்ட தலைவர் நாகராஜ் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago