காரிமங்கலம் ஒன்றியத்தில் 9 புதிய தார் சாலைகள் அமைக்கும் பணி தொடக்கம்

By செய்திப்பிரிவு

காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.2.30 கோடி மதிப்பில் 9 புதிய தார் சாலை மற்றும் 3 மேல்நிலை நீர் தேக்கத்தொட்டிஅமைக்கும் பணிகளை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் ரூ.2.30 கோடி மதிப்பில் 9 புதிய தார் சாலை மற்றும் 3 மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைக்கும் பணிகளை உயர்கல்வி மற்றும் வேளாண்மைத் துறை கே.பி.அன்பழகன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் கார்த்திகா தலைமை வகித்தார்.

பணிகளை தொடங்கி வைத்து அமைச்சர் பேசும்போது, ‘‘காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் 9 புதிய தார் சாலை, 3 மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இப்பணிகள் நிறைவுற்று விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்,’’ என்றார்.

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் பாப்பி ரெட்டிப்பட்டி கோவிந்தசாமி, அரூர் சம்பத்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்