அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மேம்பாட்டுக்கு தொழில் நிறுவன பிரதிநிதிகள் விண்ணப்பிக்க அழைப்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் அறிக்கை: தமிழகத்தில் உள்ள 32 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கும் ரூ.2.5 கோடி வட்டியில்லா கடனாகமத்திய அரசு வழங்கியுள்ளது. ஒவ்வொரு தொழிற்பயிற்சி நிலையத்திலும் மேலாண்மைக்குழு ஏற்படுத்தப்பட்டு, அக்குழுவின் தலைவராக தொழில் நிறுவனத்தைச் சேர்ந்த பிரதிநிதி செயல்படுவார். இத்திட்டத்தில் பங்குகொள்ள விருப்பமுடைய தொழில் நிறு வனங்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்படுகிறது.

தேனி, திருக்குவளை, திருப்பூர் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பொறுப்பேற்க விருப்பமுடைய தொழில் நிறுவனங்கள், பிற மாவட்டங்களைச் சேர்ந்ததாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களை www.tenders.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அறியலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE