தூத்துக்குடி பிஎஸ்என்எல் முதன்மை பொது மேலாளர்அலுவலக செய்திக்குறிப்பு:மொபைல் வாடிக்கையாளர்களின் நலனுக்காக பிஎஸ்என்எல் புதிய சிம் பிளான் 47-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தில்இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற இலவச குரல் அழைப்புகள் வழங்கப்படுகிறது. இத்துடன் 14 ஜி.பி. டேட்டாவும் வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 28 நாட்களாகும். தினமும் 100 எஸ்.எம்.எஸ் அனுமதிக்கப்படுகிறது. இந்த சிறப்பு சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக ஒரு சிம் மார்ச் 31-ம்தேதி வரை கிடைக்கிறது. இதேபோல், மொபைல் பிளான்108-வுடன் தேசிய ரோமிங்கில்வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற இலவச குரல் அழைப்பு மற்றும் 500 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 60 நாட்களுக்கு தினமும் ஒரு ஜி.பி. டேட்டாவும் வழங்கப்படுகிறது.
மேலும் எப்.டி.டி.ஹெச். திட்டங்களில் 3,300 ஜி.பி. வரை டவுன்லோடு செய்யும் வசதியுடன், 300எம்.பி.பி.எஸ் வேகத்துடன் சேவைகள் வழங்கப்படுகின்றன. கூடுதல் சலுகையாக, பி.எஸ்.என்.எல் புதிய பாரத் பைபர் வாடிக்கையாளர்களுக்கு மார்ச் 31-ம் தேதி வரை இலவசமாக ஒரு சிம் கார்டு வழங்கப்படுகிறது. இந்த சிம்மில் வாடிக்கையாளர்களுக்கு 100 நிமிடத்துக்கான இலவச குரல்அழைப்புகள் மற்றும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இந்தசிம் வேலிடிட்டி 60 நாட்களாகும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago