அங்கன்வாடி ஊழியர்கள் 3-வது நாளாக போராட்டம்

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி பணியாளர்கள் 3-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று 3-வது நாளாகநடைபெற்ற காத்திருப்பு போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் மாரியம்மாள் தலைமை வகித்தார். இதில், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாக்கியசீலி, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியாற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் கடந்த 22-ம் தேதி முதல் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர். நேற்று 3 -வது நாளாக அவர்களின் போராட்டம் தொடர்ந்தது.

அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தலை யில் முக்காடு அணிந்து போராட்டம் நடத்தினர். அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் முறையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராடம் நடைபெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்