பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3-வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

By செய்திப்பிரிவு

வேலூரில் அங்கன்வாடி ஊழியர்கள் 3-வது நாளாக நேற்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்புப் போராட்டம் நேற்று மூன்றாவது நாளாக நடைபெற்றது. அதன்படி, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நேற்று நடைபெற்ற காத்திருப்புப் போராட் டத்துக்கு அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அமிர்தவள்ளி தலைமை வகித்தார். இதில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவையில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும்உதவியாளர்களை அரசு ஊழியர் களாக மாற்ற நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தார். அதன்படி, தமிழகத்தில் அங்கன்வாடி ஊழியர் கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் மற்றும் முறையான ஓய்வூதியம் வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் முழக்கங்களை எழுப்பினர். 3-வது நாளாக நேற்று நடைபெற்ற காத்திருப்புப்போராட்டத்தில் வேலூர் சுற்றுவட்டாரப் பகுதி களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர்கள் சுமதி, வெண்மதி மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்