திருப்பூர் மாவட்டம், உடுமலை கொழுமம் சாலையில் ரயில்வே கேட் உள்ளது. இவ்வழியாக உடுமலை மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து எஸ்.வி.புரம், கண்ணம்மநாயக்கனூர், உரல்பட்டி, கிளுவங்காட்டூர், பாப்பான்குளம், சாமராயபட்டி, குமரலிங்கம், கொழுமம், ருத்திராபாளையம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கொழுமம் சாலை ரயில்வே கேட் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் கிராமப்புற மாணவிகள் ஏராளமானோர் படிக்கின்றனர். கொழுமம் வழித்தடம் வழியாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள், நகரப் பேருந்துகள் மூலமாக பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் கொழுமம் ரயில்வே கேட் பகுதியில் இருபுறமும் பேருந்து நிறுத்தம் இருந்தும், பயணிகள் நிழற்கூரை இல்லாததால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘‘கொழுமம் சாலையில் ரயில்வே கேட் பகுதியில் இருபுறமும் பயணிகள் நிழற்கூரை அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மழை மற்றும் வெயில் காலங்களில் மாணவிகள் அவதி யடைகின்றனர். உடனடியாக பயணிகள் நிழற்கூரை அமைக்க வேண்டும்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago