சம்பள பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க கோரி பனியன் தொழிற்சங்கத்தினர் தர்ணா

By செய்திப்பிரிவு

திருப்பூர் பின்னலாடை தொழிலா ளர்களுக்கு 2016-ம் ஆண்டு போடப்பட்ட சம்பள உயர்வு ஒப்பந்தமானது, 2020 மார்ச் 31-ம் தேதியுடன் காலாவதியானது. இந்த ஒப்பந்தத்தில், முதலா மாண்டு தொழிலாளர்கள் வாங்கும் சம்பளத்திலிருந்து 18 சதவீத உயர்வும், அடுத்து வரும்3 ஆண்டுகளுக்கு தலா 5 சதவீதஉயர்வும் வழங்க முடிவு செய்யப் பட்டது. அதனடிப்படையிலேயே தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டது.

இந்நிலையில், கடந்தாண்டு மார்ச் மாதத்துடன் காலாவதியான ஒப்பந்தத்துக்கு பதிலாக அடுத்த ஒப்பந்தமானது இதுவரை போடப்படவில்லை. அதுகுறித்த பேச்சுவார்த்தையை தொடங்க முதலாளிகள் சங்கங்களுக்கு தொழிற்சங்கங் கள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதையடுத்து தொடங்கியுள்ள பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க வலியுறுத்தி, திருப்பூர் குமரன் நினைவகம் முன் அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.

சிஐடியு பனியன் சங்க செயலாளர் சம்பத் தலைமை வகித்தார். ஏஐடியுசி, எல்பிஎஃப், ஐஎன்டியுசி, எம்எல்எஃப், ஹெச்எம்எஸ்தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், பின்னலாடை உற்பத்தி நிறுவனப் பணியாளர்கள் கலந்துகொண்டனர். மேலும், பயணப்படி, வீட்டு வாடகைப்படி,கல்வி உதவித் தொகை, பணிக்காலத்தில் மரண மடையும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி, ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை உள்ளிட்டகோரிக்கைகளும் வலியுறுத்தப் பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்