கேளம்பாக்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சவரத் தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில், நாவிதர் சமுதாய மாணவ, மாணவிகளுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 5% உள்இட ஒதுக்கீடு வழங்குதல் உள்பட5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் சண்முகம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் முனுசாமி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில், மருத்துவ நாவிதர் சமுதாய மாணவ, மாணவிகளுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 5% உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், கோயில்களில் பணிபுரியும் தவில், நாதஸ்வர இசை கலைஞர்களையும் முடிதிருத்தும் தொழிலாளர்களையும் அரசு ஊழியர்களாக பணியமர்த்த வேண்டும், சித்த மருத்துவ கல்லூரிகளில் நாவித மருத்துவ சமுதாய மாணவ, மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், கோரிக்கைகளை நிறைவேற்றும்படி தமிழக அரசுக்கு வலியுறுத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago