கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது.
கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, அண்ணாகிராமம், புவனகிரி, குமராட்சி மற்றும் பரங்கிப்பேட்டை ஆகிய 6 வட்டாரங்களில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் கரோனா காலத்தில் புலம் பெயர்ந்த இளைஞர்கள் தொழில் தொடங்க கரோனா நிதியாக 12 ஆயிரத்து 762 பேருக்கு ரூ. 19 கோடியே 41 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடந்தது. தமிழ்நாடு ஊரக புத்தாக்கத்திட்ட மாவட்டசெயல் அலுவலர் ராஜாத்தி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அகிலன்,மாவட்ட தொழில் மையம் அலுவலர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago