காலமுறை ஊதியம் கோரி விழுப்புரம், கடலூரில் மறியலில் ஈடுபட்ட 132 சத்துணவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். பணித்தொகையாக சத்துணவு அமைப்பாளருக்கு ரூ.5 லட்சம், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் படி விழுப்புரம் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே சங்க மாவட்ட பொருளாளர் ஜெயந்தி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 92 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதே போல் கடலூரில் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மறியலில் ஈடுபட்ட சங்க ஒன்றிய செயலாளர் கற்பகம் உள்பட 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago