பிரதமர் மோடி நாளை கோவை வருகை பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்

By செய்திப்பிரிவு

அரசு நிகழ்ச்சி மற்றும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிர தமர் மோடி நாளை கோவை வருகிறார். இதையொட்டி 6,500 போலீஸார் பாது காப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி, ஒருநாள் பயணமாக நாளை (25-ம் தேதி) புதுச் சேரி மற்றும் கோவைக்கு வருகிறார். டெல்லியில் இருந்து நாளை காலை 7.45 மணிக்கு தனி விமானத்தில் புறப்படும் பிரதமர் மோடி, காலை 10.30-க்கு சென்னை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் புதுச்சேரி செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், பிற் பகல் 2.10 மணிக்கு மீண்டும் சென்னை வந்து, தனி விமானத்தில் பிற்பகல் 3.35 மணிக்கு கோவை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு, அரசு விழா நடக்கும் கொடிசியா தொழிற்காட்சி அரங்குக்கு செல்கிறார்.

அங்கு நடக்கும் விழாவில் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் (என்எல்சி), கப்பல் போக்குவரத்துத் துறை, மின் துறை, தமிழக அரசின் குடிசை மாற்று வாரியம், நகராட்சி நிர்வாகத் துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அத்துடன் ஏற்கெனவே முடிக்கப்பட்ட திட்டங்களையும் தொடங்கிவைக்கிறார்.

அதைத் தொடர்ந்து மாலை 5 மணி அளவில் கொடிசியா மைதானத்தில் பாஜக சார்பில் நடக்கும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் பேசுகிறார். இக்கூட்டத்தில், பாஜக முக்கியத் தலை வர்கள் கலந்துகொள்கின்றனர். கூட்டம் முடிந்தவுடன் கோவை விமான நிலையத் துக்கு காரில் சென்று, அங்கிருந்து தனி விமானத்தில் டெல்லி திரும்புகிறார்.

பிரதமர் வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையம், கொடிசியா தொழிற்காட்சி வளாகம், பிரச்சாரக் கூட்டம் நடக்கும் மைதானம் உள்ளிட்ட இடங்களில் பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப் புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு டிஜிபி (சட்டம்-ஒழுங்கு) ராஜேஷ் தாஸ், டிஜிபி சைலேந்திரபாபு, கூடுதல் டிஜிபி அமரேஷ் புஜாரி, மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் ஆகியோர் தலைமையில் 6,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்