கருணை வேலைக்கு அவகாசம்வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், ரயில்வே அமைச்ச ருக்கு எழுதியுள்ள கடிதம்:

ரயில்வே ஊழியர்கள் இறந்தால், அவர்களுடைய குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் வேலை தரப்படுகிறது. இதற்கு குறைந்தபட்சக் கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு. இத்தகுதி 2012-ல் தளர்த்தப்பட்டது. எட்டாம் வகுப்பு தேர்வானாலும் கருணை அடிப்படையில் வேலை தரப்பட்டது. ஆனால், அந்த நபர் 5 ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு தேர்வாகி சான்றிதழ் அளிக்க வேண்டும்.

தற்போது அது விலக்கிக் கொள்ளப்பட்டு குறைந்தபட்சக் கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு இருந்தால்தான் வேலை என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இன்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத அத்தகைய ஊழியர்கள் ஒரு சிலரே இருக்கும் சூழலில் அவர்களுக்கு ஒருமுறை விதிவிலக்கு அளித்து நிரந்தரம் செய்ய வேண்டும்

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்